ஒளி தெரியும் வானமது
தொலைவில்தான்
ஆனாலும் வானத்தை,
தொட்டு விட முயற்சி செய்...
எழில் மிகுந்த மலைமுகடும்
உயரத்தில்தான்
ஆனாலும் உச்சியை,
எட்டிவிட முயற்சி செய்...
Thursday, August 18, 2005
முயற்சி செய்!!
Posted by
கலை
at
8/18/2005 03:51:00 PM
6
comments
Labels: சிந்தனை
Sunday, May 15, 2005
எது சமுதாயம்??
எது சமுதாயம்??
அவன்,
அவள்,
அவர்கள்....
அல்ல சமுதாயம்.....
நான், நீ, அவர்கள்...
எல்லாம் நிறைந்த,
நாமே சமுதாயம்
Posted by
கலை
at
5/15/2005 03:34:00 PM
5
comments
Labels: சிந்தனை
நிழலாகும் நிஜம்......
நிழலாகும் நிஜம்......
நிஜங்கள்
நிழல்களாகையில்...
கையில்...
நினைவுச் சின்னங்கள் எதற்கு....
அதுதான்..
நெஞ்சு நிறைய..
நினைவுகள் உண்டே....
Posted by
கலை
at
5/15/2005 03:32:00 PM
0
comments
Labels: சிந்தனை
தூரப்பயணம் செய்!
தூரப்பயணம் செய்!
குறுகிய வட்டத்திற்குள்
சுற்றி சுற்றி வருகிறோம்.....
சுற்றமும், உறவுகளும்-
அதுவே நம், உலகமாய் எண்ணி,
உலகம்.... பரந்தது, விரிந்தது....
வான வீதியில்,
சிறகு விரித்துப் பறக்கலாம்....
உனக்கென மட்டும் எண்ணாமல்,
உலகுக்குமாய் சேர்த்து.......
திறமைகள் உண்டெனில்,
மடமைகள் போக்கி,
துயரங்கள் நீக்கி,
தூரப்பயணம் செய்யலாம்,
மீண்டும் மீண்டும் -
இந்த சிறிய வட்டத்தினுள் -
ஏன் குறுகிய பயணம்?
Posted by
கலை
at
5/15/2005 03:28:00 PM
0
comments
Labels: சிந்தனை







