மழையில் கண்ணீர்!!
அன்று அவன்
சொன்னான்...
ஒரு குடைக்குள்
நீயும் நானும்
இணைந்திருக்கும்
நிமிடங்களின்
நினைவுகள்
மனதினில்
நீங்காமல் என்றும்
நிறைந்திருக்கும்.....
இன்று அவள்
சொல்கிறாள்...
நனைந்திருந்த
நிமிடங்கள்
பாரமாய் நெஞ்சினிலே
பிரிந்துவிட்டோம்
என்பதனால்...
குடை பிடிக்க
இஷ்டமில்லை...
கன்னத்தில்
காய்ந்த கண்ணீர்
கரையட்டும்
மழை நீரில்....
Tuesday, November 01, 2005
மழையில் கண்ணீர்!!
Posted by
கலை
at
11/01/2005 06:03:00 PM
11
comments
Labels: காதல்
Subscribe to:
Posts (Atom)